Saturday, 12 March 2011

நம்ம பணம் திருட்டுப் போச்சு...........

அம்மா! அம்மா! ரெண்டு ரூவாய தொலைச்சுடேன்,
சனியனே! எவ்ளோ கஷ்டப்பட்டு சம்பாதிக்குறேன் தொலைஞ்சிட்டுனு சாதாரணமா சொல்ற!!!!!!!!!!!

ரொம்ப சந்தோசமா இருக்கிங்க போல? ,உங்க வீட்டு பணம் எதும் காணபோலனு?....கீழப் படிச்சு பாருங்கங்க யார் வீட்டு பணம் போச்சுனுத் தெரியும்..............................

பணத்ததான் திருடுவாங்கனு நினைச்சேன்.......
இப்போ அலை வரிசையும் திருட்டுப்போகுது......

விடுதலை பெற்ற இந்தியாவின் 60 ஆண்டுக் காலத்தில் நாடாளுமன்றத்தையும், நாட்டையும் உலுக்கிய ஊழல் விவகாரங்கள் ஏராளம்.இந்தியாவின் ‘ஊழல் புராணத்தை’ கிளறினால் அது நீண்டு கொண்டே போகும்.
அறுபது ஆண்டுகால ஊழல்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு
தற்போது நடத்தி உள்ள ஊழல் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

பண்டித நேரு காலத்தில் இராணுவ அமைச்சர் வி.கே. கிருஷ்ணமேனன் மீது சுமத்தப்பட்ட ‘ஜீப்’ ஊழலில் சம்பந்தப்பட்ட தொகை சில இலட்சங்கள்தான்.

முந்த்ரா ஊழலில் சிக்கிய டி.டி.கிருஷ்ணமாச்சாரி, மீது குற்றம் சாட்டப்பட்டபோது தொகை ஒன்றரை கோடி ரூபாய்.

மராட்டியத்தில் ஏ.ஆர்.அந்துலே சம்பந்தப்பட்ட சிமெண்ட் ஊழலின் தொகை ரூ.26.6 இலட்சம் ஆகும்.

ராஜீவ்காந்தியின் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் கமிஷனாக கைமாறிய தொகை ரூ.64 கோடி என்று கூறப்பட்டது.

நரசிம்மராவ் காலத்தில் நடந்த யூரியா இறக்குமதி ஊழலில் சம்பந்தப்பட்ட தொகை ரூ. 133 கோடி.

ஹர்சத் மேத்தாவின் பங்கு பத்திர ஊழல் மோசடியில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.5,500 கோடி; அது போலவே இன்னொரு, பங்கு வர்த்தக மோசடியில் ஈடுபட்ட ‘கேத்தன் பரேக்’ சம்பந்தப்பட்ட தொகை ரூ.6,400 கோடி ஆகும்.
இவை எல்லாவற்றையும் விட இந்திய அரசாங்கத்திற்கு அறுபது ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருக்கின்றது மத்திய தகவல் தொடர்புத் துறை.
தற்போது தகவல் தொழில்நுட்பப் புரட்சி யுகத்தில் அலைபேசிகள் ( Mobile Phones ) வந்துவிட்டன. தகவல்கள், மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு ( Electromagnetic Waves ) அவை கடத்திகள் ( Transmitter ) மூலம் அனுப்பப்படுகின்றன. மின்காந்த அலைகளை உள்வாங்கிக் கொள்ளும் கருவிகளை ( Receiver ) பயன்படுத்தி அலைபேசிகளுக்கு ( Cell Phones ) தகவல்கள் போய்ச் சேருகின்றன. இவ்வாறு தகவல் தொடர்புகளுக்குப் பயன்படும் மின்காந்த அலைகளின் தொகுப்புகளுக்கு அலைக் கற்றைகள் ( Spectrum ) என்று பெயர்.

செயற்கைக் கோள் உதவியுடன் தகவல் தொடர்புக்கு பயன்படும் இந்த “அலைக்கற்றைகள்’ (ஸ்பெக்ட்ரம்) இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.செல்போன் சேவைக்காக ‘ஸ்பெக்ட்ரம்’ தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டுக்காக அந்நிறுவனங்கள் அரசுக்கு உரிமம் கட்டணம் ( License Fee ) செலுத்த வேண்டும். இரண்டாவது தலைமுறை அலைவரிசையை ( 2G Second Generation Wireless Telephony ) தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில்தான் இந்திய அரசுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்தியத் தொலைத் தொடர்புத் துறை, ‘2G ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு செய்வதற்கு பொது ஏல முறையைக் கடைப்பிடிக்காமல், முதலில் வருபவருக்கு முன் உரிமை என்ற ‘விசித்திரமான’ அடிப்படையில் இரண்டு நிருவனங்களுக்கு வர்த்தகம் செய்துள்ளது.

ஒன்று, ஸ்வான் ( Swan Telecom ) மற்றொரு நிறுவனம் யூனிடெக் ( Unitech ) இந்த இரு நிறுவனங் களுக்கும் ‘2G அலைவரிசைகள்’ முதலில் வந்தவர்களுக்கு முன் உரிமை என்ற அடிப்படையில், 2001ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட விலையில்(அதாவது குறைவான விலை) உரிமம் கட்டணம் பெற்றுக் கொண்டு ‘ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஸ்வான் நிறுவனம் ‘2G ஸ்பெக்ட்ரம்’ உரிமத்தை ரூ.1,537 கோடிக்கு வாங்கியது. அதேபோல யூனிடெக் நிறுவனம் ரூ. 1,651 கோடிக்கு வாங்கி உள்ளது. ஸ்வான் நிறுவனம் நாடெங்கும் 13 பகுதிகளுக்கும் யூனிடெக் நிறுவனம் 23 பகுதிகளுக்கும் ‘செல்போன் சேவை’ வழங்குவதற்கான உரிமங்களைப் பெற்றன.

2G அலைவரிசை கட்டணமாக ரூ.1,537 கோடி அரசுக்கு செலுத்திய ஸ்வான் நிறுவனம், ஒரே ஒரு பைசா கூட செலவழித்து, மக்களுக்கு செல்போன் சேவையைத் தொடங்கவில்லை. மாறாக ஸ்வான், தனது 45% பங்குகளை, ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த ( UAE ) எடிசலாட் ( Etisalat ) என்ற நிறுவனத்திற்கு ரூ. 4,500 கோடிக்கு விற்பனை செய்து விட்டது.

இதுபோன்றே யூனிடெக் நிறுவனமும் ஒரு பைசா கூட செலவழிக்காமல், தனது 60% பங்குகளை நார்வே நாட்டைச் சேர்ந்த டெலிநார் ( Telenor ) என்ற நிறுவனத்துக்கு ரூ.6,120 கோடிக்கு விற்றுவிட்டது.

இந்த அக்கிரமங்களால் இந்தியவுக்கு(அதாங்க நமக்குதான்) ஏற்ப்பட்ட இழப்பு சுமார் 60000 கோடி.........

ரெண்டு ரூபாய்க்கு பதறுற மனசு,இந்தியாவின் தலையெழுத்த மாத்துற 60000 கோடிய பற்றி ஏன் சிந்திக்கல???????????????????
“மக்களால் மக்களுக்காக மக்களே
செய்யும் ஆட்சியே மக்கள் ஆச்சு”
ஆன, நம்ம நாட்டுல நடக்குற ஆட்சி என்னனு எனக்கும் புரியல,உங்களுக்கும் புரியலனு நினைக்குறேன்.

அம்பேத்கார் எழுதுன சட்டத்துல ஒன்னக்கூட நம்ம தெரிஞ்சிகல ஆமாங்க தெரிஞ்சிருந்தா நம்ம பணம் நம்மல விட்டு போய் இருக்காது.
இத்தன வருசமா வெளிவராத விசயம் இப்பமட்டும் ஏங்க வெளிவந்துசு?
அவங்ககுள்ள நடந்த சுயநல பேச்சு வார்த்தையால் தான் காரணம்.இதுக்கூட நம்ம நலனுக்காக அல்ல.....
ஒரு தப்புனா ரெண்டு பக்கம் இருக்கும் ....ஒரு பக்கம் அவங்கனா
இன்னொருப் பக்கம் நம்மதான் இருக்கோம்!!!
இந்தியா எங்க போகுதுனு கேள்வி கேட்குறத விட்டுட்டு ,எங்க அழைச்சுக்கிட்டு போறோம்னு பாருங்க...
நம்ம முன்னோர்கள் போன ஒத்தயடி பாதைய தொடருர நாம,ஏன் புதுசா பாத அமைக்ககூடாது?

படமா பார்த்த ரமணாவையும்,அன்னியனையும்,சிட்டிசனையும் நடைமுறைக்கு கொண்டுவந்தா தான் இந்தியா திருந்தும் போல......


என்னதான் பேசினாலும் போன பணம் போனதுதான்............

இனிமையாச்சும் உங்க வீட்டு ரெண்டு ரூவாய பத்தரமா வச்சிக்கோங்ககககக.............................................

5 comments:

  1. இது அரசியல்....மூச்.
    இந்த விளையாட்டில் பகடைக் காய்கள் நகராது !

    ReplyDelete
  2. நல்ல விழிப்புணர்வுப்பதிவு... நீங்க மணி ரத்னம் ரசிகர் போல....

    ReplyDelete
  3. @சி.பி.செந்தில்குமார்


    correct sirrrrr...

    ReplyDelete
  4. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete